முதலமைச்சர் வருகை: கரூரில் பலத்த போலிஸ் பாதுகாப்பு
கரூரில் நடைபெறும் அரசு விழா மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் பயணிக்கிறார் முதலமைச்சர் விஜய்.
திருச்சியிலிருந்து கார் மூலம் கரூர் செல்கிறார், அவர் செல்லும் வழியில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது, ரோடு ஷோ செல்லவுள்ள அட்லஸ் கலையரங்கம் முதல் சுற்றுலா மாளிகை வரை சுமார் 10 கி.மீ தூரத்திற்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தின் அருகே மூன்று பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தவெக பிரசார கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் 32 பேருக்கு அரசு வேலைக்கான பணிநியமன வேலையை வழங்குகிறார்.
தொழிற்சாலைக்கு அடிக்கல்
பிற்பகல் 3 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார், தொடர்ந்து 1700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார், இதன் மூலம் சுமார் 13,500 பேருக்கு வேலை கிடைக்கும்.