சேலத்தில் முதல்வர் ஆய்வு..! புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிகிச்சை மையம் ஆய்வு..!
cm
stalin
inspection
new covid treatmentplace
By Anupriyamkumaresan
சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் சென்றடைந்தார்.
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இரண்டு நாள் பயணமாக 5 மாவட்டங்களுக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனோ ஆய்வு மேற்கொள்கிறார். முதலமைச்சருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் பயணம் மேற்கொள்கிறார்.
இந்த ஆய்வை சேலம் மாவட்டத்தில் இருந்து தொடங்கிய அவர், அங்குள்ள இரும்பு ஆலை வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய புதிய சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.