ஆளுநர் இல.கணேசனை தொலைபேசியில் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Oct 04, 2022 11:32 AM GMT
Report

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஆளுநர் இல.கணேசனை தொலைபேசியில் நலம் விசாரித்தார்.

ஆளுநரை நலம் விசாரித்தார் முதலமைச்சர் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஆளுநராக இருந்து வருபவர் இல.கணேசன்.

அண்மையில் இவருக்கு உடல் நலக்குறைவு பாதிக்கப்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஆளுநர் இல.கணேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

ஆளுநர் இல.கணேசனை தொலைபேசியில் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Cm Inquired About The Health Of Governor L Ganesan

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கதில், உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஆளுநர் திரு.இல. கணேசன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன்.

அவர் விரைந்து முழு உடல்நலன் பெற்று, தனது அன்றாடப் பணிகளுக்கு திரும்பிட விழைகிறேன் என பதிவிட்டுள்ளார்.