சிப்காட் தொழிற்சாலை துவக்க பணிகளை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Nov 28, 2022 12:28 PM GMT
Report

பெரம்பலூரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்சாலையின் துவக்க பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

முதலமைச்சர் இரண்டு நாள் சுற்று பயணம் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருச்சி, பெரம்பலூர் , அரியலூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வரும் அவர், காலையில் திருச்சி, காட்டூர் பகுதியில் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ‘வானவில் மன்றம்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து தற்போது, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் அமையவுள்ள சிப்காட் தொழில் பூங்கா துவக்க விழாவில் கலந்துகொண்டார்.

அப்போது, 10 நிறுவனங்கள் முதல்வர் முன்னணிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டன. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

மொத்தமாக 250 ஏக்கர் பரப்பளவில் இந்த சிப்காட் தொழிற்பூங்கா அமையவுள்ளது. மொத்தமாக 740 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 4,800 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவுட் தெரிவிக்கப்பட்டுள்ளது.