பொங்கல் பண்டிகை; தன்னை பார்க்க வந்தவர்களுக்கு 100 ரூபாய் புது நோட்டு கொடுத்த முதலமைச்சர்
பொங்கல் பண்டிகையை அடுத்து கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
பொங்கல் பண்டிகை
சூரியனுக்கும், இயற்கை மற்றும் உழவுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வீடுகளின் முன்பு வண்ண கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் செடியை கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
பொதுமக்களுக்கு 100 ரூபாய் கொடுத்த முதலமைச்சர்
இதை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்தில் மலர் துாவி மரியாதை செலுத்தினார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் மருமகள் கிருத்திகா மற்றும் பேத்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
அதற்கு முன்பாக பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் தனது வீட்டில் பொங்கல் வாழ்த்து சொல்ல வந்த பொதுமக்களை சந்தித்தார். அப்போது அவர்களுக்கு புது 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மகிழ்ச்சி படுத்தினார்.