தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கினார் முதல்வர்

MK Stalin TN Government
By Petchi Avudaiappan May 21, 2021 05:38 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு பணிக்கான நியமன ஆணைகளை வழங்கினார். 

கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களில் ஒருவருக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மதுரை வந்திருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சார்ந்த 17 பேரின் வாரிசுகளுக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை வழங்கினார்.