தமிழகத்தில் இரவு ஊரடங்கு நீட்டிப்பா? - முதலமைச்சர் நாளை மறுநாள் ஆலோசனை

mkstalin cmmkstalin nightcurfew இரவு ஊரடங்கு tnlockdown
By Petchi Avudaiappan Jan 25, 2022 04:19 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழகத்தில் இரவு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் நாளை மறுநாள் ஆலோசனை நடத்தவுள்ளார். 

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் தமிழக அரசு கடந்த ஜனவரி முதல் வாரம் முதல்  ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.அதன்படி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

வார இறுதி நாட்களில் கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில்  இரவு ஊரடங்கு பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள்(ஜனவரி 27) மருத்துவ துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை நீட்டிப்பது அல்லது தளர்வுகள் அளிப்பது ஆகியவை பற்றியும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.