டெல்லி சென்றடைந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு! ஜெயலலிதா இடத்தை நிரப்பிய ஸ்டாலின்!
pm
delhi
cm
By Anupriyamkumaresan
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் புறப்பட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார்.
2 நாள் பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொண்டார். இன்று பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்.

முதல்வரான பிறகு மேற்கொண்ட முதல் பயணம் இது. டெல்லி சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன், திமுக நாடாளுமன்ற தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி. கனிமொழி, டெல்லி சிறப்பி பிரதிநிதி விஜயன் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அடுத்தப்படியாக தமிழகத்தின் பெருமை நிலைநாட்டுவதில் ஸ்டாலின் அந்த இடத்தை நிரப்புவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.