வெள்ள அபாய எச்சரிக்கை; டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் டெல்டாவின் 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
வெள்ள அபாய எச்சரிக்கை
கன மழை காரணமாக மேட்டூர் அணையில் காவிரி ஆற்றில் 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 14 டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
கன மழை காரணமாக மேட்டூர அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவேரி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுத்துள்ளனர்.
முதலமைச்சர் ஆலோசனை
காவேரியில் நீர்வரத்து என்பது தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான திருச்சி, கரூர், தஞ்சாவூர், உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதில் கரையோரம் வசிக்கும் மக்களை மீட்பது, வெள்ளம் ஏற்பட்டால் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறார்.