புதிய கல்விக் கொள்கை : வல்லுனர் குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு

cmstalin neweducation cmcommitte
By Irumporai Apr 05, 2022 10:04 AM GMT
Report

புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான 13 பேர் கொண்ட குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

புதிய கல்வி கொள்கையை வடிவமைக்க குழு இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, பின்வரும் சான்றோர்கள் அடங்கிய முதலமைச்சர் குழுவினை அமைத்து, மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

குழுவில் இடம்பெற்றோர் விபரம் தலைமை நீதியரசர் திரு.த.முருகேசன் அவர்களும்; இக்குழுவின் தலைவராக மாண்பமை தில்லி உயர்நீதிமன்ற மேனாள் உறுப்பினர்களாக பேராசிரியர் திரு. எல். ஜவஹர்நேசன், முன்னாள் துணைவேந்தர், சவீதா பல்கலைக்கழகம்; திரு. இராமானுஜம், ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர், தேசிய கணித அறிவியல் நிறுவனம்; பேராசிரியர் திரு. சுல்தான் இஸ்மாயில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்.

பேராசிரியர் திரு. இராம சீனுவாசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்; முனைவர் அருணா ரத்னம், மேனாள் சிறப்புக் கல்வி அலுவலர், யூனிசெப் நிறுவனம்; திரு.எஸ்.இராமகிருஷ்ணன், எழுத்தாளர்; திரு விஸ்வநாதன் ஆனந்த், உலக சதுரங்க சேம்பியன்.

திரு.டி.எம்.கிருஷ்ணா, இசைக் கலைஞர்; திரு.துளசிதாஸ், கல்வியாளர்; முனைவர் திரு.ச.மாடசாமி, கல்வியியல் எழுத்தாளர்; திரு.இரா.பாலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிச்சான்குப்பம், நாகப்பட்டினம் மாவட்டம்; திருமதி.ஜெயஸ்ரீ தாமோதரன், அகரம் அறக்கட்டளை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது