200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு? முதலமைச்சர் முக்கிய கோரிக்கை!

India N. Chandrababu Naidu
By Sumathi Jul 11, 2024 07:30 AM GMT
Report

 சந்திரபாபு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பேசியது கவனம் பெற்றுள்ளது.

பணமதிப்பிழப்பு

ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு அமராவதியில் உள்ள மாநில தலைமைச் செயலகத்தில் மாநில அளவிலான வங்கியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு? முதலமைச்சர் முக்கிய கோரிக்கை! | Cm Chandrababu Naidu On 200 And 500 Rupees Notes

அதன்பின் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் சிலர் பெரும் தொகையை கொள்ளையடித்துள்ளனர். அதனால் 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும்.

சந்திரபாபு முதல்வரானதும் ஜெகன் சேனல் நீக்கம் - ஆபரேட்டர்கள் நடவடிக்கை!

சந்திரபாபு முதல்வரானதும் ஜெகன் சேனல் நீக்கம் - ஆபரேட்டர்கள் நடவடிக்கை!

முதல்வர் கோரிக்கை

அவற்றிற்கு பதிலாக டிஜிட்டல் நோட்டுகளை ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, 2017ஆம் ஆண்டும் சந்திர பாபு நாயுடு 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய கோரிக்கை வைத்தார்.

chandrababu naidu

இதற்கிடையில், 2016-ம் ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அவற்றுக்கு பதிலாக ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.