முதலமைச்சர் வேட்பாளர் அவர்தான் - நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்!
முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளர்
திருச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், ’ பாஜக இந்தியா முழுவதும் 1200 எம்.எல்.ஏக்கள், 330 எம்.பிக்களை கொண்ட கட்சி. பாஜக அதிமுக பொருந்தா கூட்டணி கூறுபவர்களுக்கு எத்தனை எம்.பிகள், எத்தனை எம்.எல்.ஏக்கள், எத்தனை கவுன்சிலர்கள் இருக்கிறார்கள்?
ஒருவரை பற்றி கூறுவதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும் ; எப்போது தேர்தல் வந்தாலும் வீட்டிற்கு அனுப்பக்கூடிய அரசாக தான் திமுக அரசு இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்;
எடப்பாடி திட்டவட்டம்
அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர். நெல்லையில் அமித்ஷாவின் உரைக்கு பின்பு எடப்பாடி பழனிசாமி மன வருத்தத்தில் இருப்பதாக கேட்கிறீர்கள்? யாரும் மன வருத்தத்தில் இல்லை. இனி பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வருவார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைவார்கள். பலமான கூட்டணி அமைத்து தான் வெற்றி பெற வேண்டும் என அவசியம் இல்லை . நிச்சயமாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வரும்; திமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்.
ஓ .பன்னீர்செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார் எனக் கேட்கிறீர்கள். திமுக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்கிற நோக்கத்தோடு, எம்.ஜி.ஆர் கொள்கையை பின்பற்றுபவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.