முதலமைச்சரை கொடூரமாக தாக்க முயன்ற மாடு - கோ பூஜையில் நடந்த கோர சம்பவம்

M K Stalin Karnataka
By Petchi Avudaiappan Apr 26, 2022 07:31 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

கர்நாடகாவில் கோ பூஜையின் போது மாடு முட்டியதில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நூழிலையில் காயமின்றி தப்பினார். 

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை   நேற்று விஜயாப்புரா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.  அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் விஜயாப்புராவில் உள்ள கொட்டகைகளில் மாடுகள் இருந்த நிலையில் அந்த இடத்துக்கு சென்றார். 

பின்னர் பசவராஜ் பொம்மை மாடுகளுக்கு நெற்றியில் குங்குமம் வைத்து கோ பூஜை செய்தார்.  அப்போது அங்கிருந்த ஒரு மாடு பசவராஜ் அருகில் நின்ற விவசாயியை எதிர்பாரா நேரத்தில் முட்டி தள்ளியது. அப்போது பசவராஜூம் சற்று தடுமாறி போனார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரை போலீசார் பத்திரமாக அங்கிருந்து அழைத்து சென்றனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமீபகாலமாக பசவராஜ் பொம்மை மாடுகளுக்கு கோ பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.