கொரோனா தடுப்பூசி விலையை குறைக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Tamil Nadu Corona Vaccine Modi Edappadi Palanisamy
By mohanelango Apr 26, 2021 11:51 AM GMT
Report

கொரோனா தடுப்பூசியின் விலையை குறைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் தடுப்பூசி தொடர்பாக புதிய தளர்வுகளை அறிவித்திருந்தது. அதன்படி தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் நேரடியாக விற்கலாம் என்றது.

அதனைத் தொடர்ந்து சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தடுப்பூசியில் விலையை அதிகரித்துள்ளன.

இதற்கு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள்ளார்.

அதில் கொரோனா தடுப்பூசியின் விலையை குறைக்க உத்தரவிட வேண்டும். மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்து தடுப்பூசிகளை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.