துபாயில் நடைபெறும் 24H கார் ரேஸ் - அஜித் குமாரின் கார்.. வெளியான அறிவிப்பு!

Ajith Kumar Viral Photos Tamil Actors
By Vidhya Senthil Oct 22, 2024 01:42 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

நடிகர் அஜித் குமார் கார் ரேஸிங்கில் களமிறங்க உள்ள நிலையில் ரேஸிங் அணியின் லோகோ வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் 

நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரிலீஸூக்கு தயாராகி வருகின்றன.

actor ajith

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் துபாயில் கார் ரேஸ் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அங்குள்ள கார் ரேஸ் கிளப்பில் உயர் ரக கார்களில் அவர் சீறிப் பாயும் வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வைரலானது.

சமந்தாவின் புதிய பாய் ஃபிரென்டா? யார் இந்த நபர் - வைரலாகும் வீடியோ

சமந்தாவின் புதிய பாய் ஃபிரென்டா? யார் இந்த நபர் - வைரலாகும் வீடியோ

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டும் துபாயில் நடைபெற இருக்கும் மிஷலின் 24H ரேஸில் களமிறங்க உள்ளார்.இதற்காக இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அணிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

கார் ரேஸ்

இந்த சுழலில் தற்போது அஜித்தின் ரேஸிங் அணியின் லோகோ வைரலாகி வருகிறது. அதில் அஜித் குமார் ரேஸிங் என்று தனது அணிக்கு அவர் பெயர் வைத்துள்ளார். மேலும் இந்த அணியின் உரிமையாளர் மற்றும் லீட் ரேஸராக அஜித் இருப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக ஆசிய ஃபார்முலா BMW சாம்பியன்ஷிப் மற்றும் பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றதன் மூலம் சர்வதேச அரங்கிற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.