சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படும் கிராம்பு - எப்படி தெரியுமா?

Health Patients Diabetes Clove Benefits நீரிழிவுநோய் உடல்ஆரோக்கியம் சர்க்கரைநோய் கிராம்பு மருத்துவகுணங்கள்
By Thahir Mar 31, 2022 11:24 PM GMT
Report

இந்தியாவில் சமைக்கப்படும் உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமான உணவுகளாக இருந்து வருகின்றன.

அந்த ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம் சமையலுக்கு சேர்கப்படும் மசாலா பொருட்கள் தான். சமையலுக்கு பயன்படுத்தப்படும் கிராம்பு ஆரோக்கியத்தின் அனைத்து குணங்களையும் பெற்றுள்ளது.

செரிமாண பிரச்சினை, பசியின்மை, சளி இருமல் குமட்டல், உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு கிராம்பு முக்கிய மருத்துவ பொருளாக பயன்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் கிராம்பு ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. தினமும் பருகும் டீயில், சிறிதளவு கிராம்பை தட்டி போட்டு குடித்தால் நெஞ்செரிச்சல், செரமாணப்பிரச்சினை, தலைவலி போன்ற பிரச்சினைகள் தீரும்.

பல நன்மைகளை தரும் இந்த கிராம்பு நீரிழிவு (சர்க்கரை) நோயிக்கும் தீர்வு தருகிறது. கிராம்பு இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டதாக உள்ளது.

இது உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.கிராம்பில் நீரிழிவு நோய்க்கான அழச்சி எதிர்ப்பு,

வலி நிவாரணி, ஆண்டிசெப்டிக் போன்ற பண்புகள் அடங்கியுள்ளது. உடலில் இன்சுலின் அளவை பராமரிப்பதில் கிராம்பின் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.