வைரல் - கடல் நீரை மேகங்கள் உறிஞ்சும் அதிசய நிகழ்வு

Viral Video
By Swetha Subash Apr 29, 2022 06:04 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கடல் பகுதியில் நேற்று மாலை கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு நடைபெற்ற நிலையில் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழிகத்தில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் கடல் பகுதியில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்தது.

இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக சாரல் மழையும் கடல் சற்று சீற்றமாகவே காணப்படுகிறது.

வைரல் - கடல் நீரை மேகங்கள் உறிஞ்சும் அதிசய நிகழ்வு | Clouds Absorb Sea Water In Kanniyakumari

இந்த நிலையில் நேற்று மாலை தூத்தூர் கடல் சற்று சீற்றமாகவே காணப்பட்ட நிலையில் திடீரென கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு ஏற்பட்டது.

இந்த நிகழ்வு சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த நிலையில் அங்கிருந்த மீனவர்கள் இந்த நிகழ்வை பல்வேறு பகுதிகளில இருந்து படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.