மெரினா கடற்கரை சாலைகள் மூடல் - பொதுமக்கள் செல்ல அனுமதி மறுப்பு
Chennai
TN Weather
Mandous Cyclone
By Thahir
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரை செல்லும் சாலைகள் மூடப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மெரினா கடற்கரை சாலைகள் மூடல்
கடும் கடல் சீற்றத்தை அடுத்து முழுவதுமாக மூடப்பட்டது சென்னை மெரினா கடற்கரை. காமராஜர் சாலையில் இருந்து மெரினா கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளது.
மேலும் காலை நடைப்பயிற்சி செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மெரினா கடற்கரை செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் உள்ளே செல்வதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.