முடிவுக்கு வரும் பிரச்சார கூட்டங்கள்: ஆட்சி யாருக்கு?
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழக அரசியலில் பெரும் பங்கு வகிக்க கூடிய திராவிட கட்சிகளான திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த முறை திமுக, அதிமுக விற்கு போடியாக மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக, தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனைப் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று இரவு 7 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிய உள்ளதால் அந்தந்த கட்சி சார்பில் ஆங்காங்கே தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.
கொரோனா , பொருளாதார நெருக்கடி, தேர்தல் வாக்குறுதி உள்ளிட்ட பல காரணங்கள் மக்கள் முன் உள்ளது. யாருக்கு முதல்வருக்கான அரியாசனம் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.