வெப்ப அலையில் சிக்கி 200 பேர் மரணம் - அதிர்ச்சி தகவல்

America Heat wave
By Petchi Avudaiappan Jul 10, 2021 02:07 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

அமெரிக்காவின் பசிபிக் வடமேற்கு பகுதிகளில் தாக்கிய வெப்ப அலை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.

வெப்ப அலை காரணமாக அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் 116 பேரும், வாஷிங்டனில் 78 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த காலக்கட்டத்தில் 

நாடு முழுவதும் பல பகுதிகளில் வெப்பநிலை 115 ° பாரன்ஹீட்டை தாண்டியதாக கூறப்படுகிறது. 

இதனிடையே தற்போது தட்பவெப்பநிலை மாறிக்கொண்டே இருக்கிறது. அதன் காரணமாகவே பல வியத்தகு வானிலை நிகழ்வுகள், பெரிய வெள்ளம், காட்டுத் தீ போன்ற பல இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன என அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த பலரின் வீட்டில் ஏர் கண்டிஷனிங் அல்லது மின்விசிறிகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் கனடாவின் பசிபிக் கடற்கரையில் 1 பில்லியனுக்கும் அதிகமான கடல் விலங்குகள் வெப்ப அலைகளால் இறந்திருக்கலாம் என பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரியலாளர் கிறிஸ்டோபர் ஹார்லி கூறியுள்ளார்.