பருக்களே இல்லாத சருமம் வேண்டுமா? உடனே இதை நிறுத்துங்க
சில உணவுகள் முகப்பரு, வறட்சி, வீக்கத்தை ஏற்படுத்தும்.
முகப்பரு
பிரெஞ்ச் ஃபிரைஸ், ஃபிரைடு சிக்கன், சிப்ஸ் போன்றவற்றில் வீக்கத்தை உண்டாக்கும் கொழுப்புகள் அதிகம். இவை முகப்பருவை மோசமாக்கி, சருமத்தை மங்கச் செய்யும்.

வெள்ளை பிரட், பாஸ்தா, பேஸ்ட்ரிகள் இரத்த சர்க்கரையை அதிகரித்து, வீக்கம் மற்றும் முகப்பருவை உண்டாக்கும். சீஸ், ஐஸ்கிரீம் போன்றவை சிலருக்கு முகப்பருவை ஏற்படுத்தலாம்.
பேக்கன், சாசேஜ்கள் போன்றவை சருமத்தில் வீக்கம் மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்தும். பேக் செய்யப்பட்ட இனிப்புகள், மிட்டாய்கள், டயட் சோடாக்கள் குடல் ஆரோக்கியத்தை பாதித்து, முகப்பரு, தடிப்புகள் போன்ற சரும பிரச்சனைகளை உண்டாக்கும்.

அதிக சர்க்கரை எடுத்துக்கொள்வது இன்சுலின் அளவை அதிகரிக்கும். இது எண்ணெய் உற்பத்தி மற்றும் வீக்கத்தை அதிகரித்து, முகப்பருவை ஏற்படுத்தும். எனவே இதையெல்லாம் சாப்பிடாமல் தவிர்ப்பது சருமத்திற்கு நல்லது.