ஸ்டோர் ரூமில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் - நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் நடந்த அதிர்ச்சி!
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டு வருபவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டின் அருகே உள்ள குப்பை தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு எரிந்த நிலையில் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த கடந்த 14 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அரசு இல்லத்தில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஸ்டோர் ரூமில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டார். அதன்படி, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அறிக்கை அளித்தார்.
நீதிபதி யஷ்வந்த் வர்மா
மேலும் காவல்துறை தரப்பில் வீடியோ ஒன்று அளிக்கப்பட்டது. இதன்மூலம் நீதிபதியின் வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா வீடு அருகே குப்பையில் எரிந்த நிலையில் 500 ரூபாய் நோட்டுகளை கண்டெடுத்ததாக தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்கு, ஐந்து நாட்களுக்கு முன்பு தூய்மைப் பணியின் போது எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகளை கண்டறிந்ததாகவும், அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை மேலும் சில நோட்டுகள் சிக்கியதாகவும் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவற்றை கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.