பசுமையை காக்க ராணுவ வீரர்கள் புதிய முயற்சி..?
ராணுவ வீரர்கள் இணைந்து பசுமையைக் காத்திடும் முயற்சியினை கன்னியாகுமரியில் செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராணுவவீரர்கள் இணைந்து ஜவான்ஸ் என்ற அமைப்பை துவங்கியுள்ளனர்.
இந்த் அமைப்பின் மூலம் "கிளீன் and கிரீன்" என்ற வாசகத்தோடு பல தூய்மை பணிகள் மற்றும் சாலை ஓரங்களில் நிழல் தரும் மரங்களை நட்டு குமரி மாவட்டத்தை தூய்மையாகவும் பசுமையாகவும் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜவான்ஸ் அமைப்பின் 57-வது களப்பணி குளச்சல் அருகே உள்ள சரல்விளை அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்த களப்பணியில் 30 மரக்கன்றுகளை நட்டும் பள்ளியின் வளாகத்தை சுத்தம் செய்தும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் விடுமுறையில் இருக்கும் ராணுவவீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவவீரர்கள் கலந்துகொண்டு களப்பணியாற்றினர்.
தொடர்ந்து சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் ஜவான்ஸ் அமைப்பினருக்கு பொதுமக்களின் பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது!!