வேலூரில் 8ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
காகிதப்பட்டறையில் புதுத்தெருவில் சிறுமி மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்ட காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் வேலூர் காகிதப்பட்டறை புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிறுமி லீலாவதி(13). சத்திரம் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த இச் சிறுமி இன்று மாலை அவரது வீட்டின் பின்புறத்தில் இருந்த மரத்தில் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மரத்தில் தனது அக்கா தொங்குவதை பார்த்த சிறுமியின் தம்பி துணியை அறுத்து கீழே இறக்கியதாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியை மீட்ட குடும்பத்தார் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார் .
தொடர்ந்த இது குறித்து வேலூர் தெற்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சிறுமியின் உடல் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 13 வயது சிறுமி தூக்கில் தொங்குவதற்கு என்ன காரணம் சாவில் மர்மம் இருப்பதாலும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.