திட்டமிட்டபடி 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் - பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

education school exam
By Jon Mar 05, 2021 11:58 AM GMT
Report

திட்டமிட்டபடி வரும் மே 3-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த மாதம் 17-ம் தேதி அரசு தேர்வுத்துறை சார்பில் பிளஸ்-2 பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற மே மாதம் 3-ந் தேதி தொடங்கி, அதே மாதம் 21-ந் தேதியுடன் நிறைவு பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந்தேதி நடைபெறுகிறது.

இதனால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே 3ஆம் தேதி தொடங்குமாக என கேள்விகள் எழுந்துன. ஆனால் திட்டமிட்டப்படி மே 3ஆம் தேதி தொடங்கும் என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.