தலைநகரில் தொடரும் வசூல் வேட்டை - திமுக அறிவாலயத்தில் கைகலப்பு

M K Stalin DMK Thangam Thennarasu
By Thahir Sep 20, 2022 09:22 AM GMT
Report

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்க கூடிய பகுதி. அந்த பகுதிகுள்ள போயிட்டு ஒரு பொருளை வாங்கிட்டு அவ்வளவு எளிதில் வெளியே வந்துவிட முடியாது.

லட்சங்கள் பார்க்காமல் விடுவதில்லை

இங்கு மறைந்த திமுகவின் முக்கிய தலைவரின் பெயர் கொண்டவர் ஒருவரின் ஆட்கள் அந்த பகுதிக்கு சென்று ஒவ்வொரு வியாபாரிகளிடமும் தினமும் அண்ணன் சொன்னாரு என்று கல்லா கட்டி வருகின்றனர்.

தலைநகரில் தொடரும் வசூல் வேட்டை - திமுக அறிவாலயத்தில் கைகலப்பு | Clash In Dmk Campus

அதுவும் தினமும் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அண்ணனின் வசூல் வேட்டையால் தினமும் புலம்பி தள்ளுகின்றனராம் அந்த பகுதி வியாபாரிகள்.

இது மட்டுமல்லாமல் அண்ணன் தனக்கு நெருக்கமானவர்களுக்கு உட்கட்சியில் வார்டு பொறுப்பாளர் பதவியிலும் வழங்கி குதுகலப்படுத்தி வருகிறாராம்.

இன்னொரு பக்கம் இதை பார்த்து கடுப்பான அப்பகுதி கட்சியினர் இத்தனை வருசமாக நாங்க இருக்கோம் ஆனா எங்களுக்கு பொறுப்பு கொடுக்காம உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பொறுப்பு கொடுக்குறீங்களே என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த பகுதிக்கு சம்மந்தப்பட்ட மாவட்டம் அவரின் பெயர் கடவுளின் கையில் இருக்கும் கூறான ஆயுதத்தின் பெயர் கொண்டது. அவர்கிட்ட கட்சியினர் போய் இதையெல்லாம் எடுத்து சொல்ல நான் என்ன பண்றது அவரை மீறி என்னால எதுவும் பண்ண முடியாது என்று கட் அன்ட் ரைட் ஆ சொல்லிவிடுகிறார் அந்த மாவட்டம்.

அறிவாலயத்தில் கைகலப்பு 

இந்த பிரச்சனை தொடர்பாக அப்பகுதி கட்சியினர் அறிவாலயத்திற்கும் புகார் கொடுக்க போன நிலையில் அங்கு வசூல் வேட்டை தரப்பினருக்கும் புகார் கொடுக்க போனவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறிடுச்சாம்.

தலைநகரில் தொடரும் வசூல் வேட்டை - திமுக அறிவாலயத்தில் கைகலப்பு | Clash In Dmk Campus

பின்னர் தலைமைகிட்ட அதாவது அண்மை காலமாக பேசு பொருளாக மாறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவிடமும் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும் புகார் கொடுத்திருக்காங்க.

புகாரை வாங்கி கொண்ட அவர்கள் நிச்சயமாக தலைமைகிட்ட பேசுறோம். என்ன பண்றது மாற்று கட்சியில் இருந்து இங்க வந்து அமைச்சராகியுள்ள அவரின் ஆதரவு நீங்கள் கொடுத்த வசூல் மன்னனுக்கு நிறையாவே உள்ளது என்று சொல்லிட்டாங்களாம்.

நிச்சயமாக முதலமைச்சர் கவனத்திற்கு இந்த சம்பவம் எல்லாம் போகும் நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை கொடுத்து அனுப்பி விட்டாங்களாம்.

தலைநகரில் இந்த வசூல் வேட்டை தொடர்ந்தார் வரும் தேர்தலில் விளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கு என்று கருத்து தெரிவிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்