அதிமுக கூட்டணியில் கருத்து மோதல் - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்துக்கு பாஜகவின் கே.டி.ராகவன் பதிலடி கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வியை சந்தித்தது.
இதனிடையே பாஜகவுடனான கூட்டணியால் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்ததால்தான் அதிமுகவுக்கு தோல்வி கிடைத்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுகவால்தான் பாஜக தோற்றதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இந்த கருத்து மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
20 இடங்களில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்று 20 ஆண்டுகளுக்குப் பின் பேரவைக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.