நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையே மோதலா? - ரசிகர்கள் அதிர்ச்சி

Nayanthara Vignesh Shivan
By Thahir 4 மாதங்கள் முன்

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யார் இந்த நயன்தாரா?

கேரளா மாநிலம் பத்தனம்திட்ட மாவட்டம் திருவல்லா பகுதியைச் சேர்ந்தவர் நயன்தாரா இவர் இயற்பெயர் டயானா மரியா குரியன்.

2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள திரைப்படம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து சந்திரமுகி,சிவகாசி,கஜினி,கள்வனின் காதலி,வல்லவன்,தலைமகன்,ஈ,சிவாஜி,பில்லா உள்ளிட்ட புகைப்படங்களில் நடித்தார்.

Nayanthara

மலையாளம்,தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையாக வலம் வந்தவர் தான் இந்த நயன்தாரா. 

விருதுகள்

பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த நயன்தாரா 2013 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருதை வென்றார்.

2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளை பெற்றார். மேலும் கலைமாமணி விருது ,நந்தி விருது ஆகியவைகளை தன் நடிப்புகள் மூலம் மேற்கண்ட விருதுகளை வென்றார்.

காதல்

இந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

Nayanthara Marriage

7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா கடந்த ஜுன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

ஹனிமூன்

திருமணம் முடிந்து தேனிலவுக்கான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தாய்லாந்து நாட்டிற்கு சென்றிருந்தனர்.

பின்பு தாய்லாந்து நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் விக்னேஷ் சிவன். 

இருவருக்கும் இடையே பிரச்சனை

தேனிலவு சென்று திரும்பிய நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி திரைப்படங்களில் பிசியாகின. நயன்தாரா ஜவான் திரைப்படத்தில் நடிக்க மும்பை சென்ற நிலையில் சென்னை திரும்பினார்.

Vignesh Shivan

இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

வதந்திகள் பரவலா?

விக்னேஷ் சிவன் மீது நயன்தாரா கடும் கோபத்தில் இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், நயன்தாராவை விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு முன்பு தங்கமே, கண்மணியே, என நயன்தாராவை கொஞ்சி வந்த நிலையில்,

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையே மோதலா? - ரசிகர்கள் அதிர்ச்சி | Clash Between Nayanthara Vignesh Sivan

தற்போது திருமணத்திற்கு பின் அவ்வாறு இல்லாமல் இருப்பது பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம் என பேசப்பட்டு வருகிறது. இந்த தகவல் வதந்திகளாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.