அரண்மனையில் பயங்கர மோதல்... வாரிசுகளுக்கு இடையே கடும் போட்டி - நடந்தது என்ன?
அரண்மனை வாரிசுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அரண்மனையில்..
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரபல அரண்மை ஒன்று உள்ளது. இதனை அரச குடும்பத்தை சேர்ந்த வம்சாவளியினர் பராமரித்து வருகின்றனர். இந்த அரச குடும்பத்தின் 77வது மேவார் மகாராஜாவாக பாஜக எம்.எல்.ஏவும் அரச குடும்பத்தை சேர்ந்தவருமான விஷ்வராஜ் சிங் மேவார் முடிசூட்டிக்கொண்டார்.
இவருக்கும் இவரது ஒன்று விட்ட சகோதரர் மருத்துவர் லக்ஷய் ராஜ் சிங் மேவாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. புதிய மகாராஜாவான பாஜக எம்.எல்.ஏ விஷவராஜ் சிங், உதய்பூர் அரண்மைனைக்கு செல்ல முயன்றார்.
நடந்தது என்ன?
ஆனால், விஷ்வராஜ் சிங்கின் சித்தபாவும், ஒன்றுவிட்ட சகோதரர் லக்ஷ்ய ராஜ்ஜும், விஷ்வராஜ் சிங் செல்வதற்கு அனுமதி மறுத்தனர். இதில் ஆத்திரமடைந்த விஷ்வராஜ் சிங் ஆதரவாளர்கள் கேட்டில் நின்று கற்களை வீசித் தாக்கினர். அரண்மைனைக்குள் இருந்தவர்கள் திரும்ப கற்களை வீசித் தாக்கினர்.
இதனால் அந்த இடமே போர்க்களம் போல் ஆனது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவ தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதி மூவர் படுகாயம் அடைந்தனர். கவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வன்முறையில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டனர்.