பாஜகவினர் இடையே மோதல் - கடும் கோபத்தில் அண்ணாமலை

Tamil nadu BJP K. Annamalai Kallakurichi
By Thahir Jan 08, 2023 05:40 AM GMT
Report

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டதால் பரபரப்பு.

பாஜகவினர் மோதல் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி பாஜக மாவட்ட தலைவர் அருள் முன்னிலை வகித்த நிலையில் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னதாக பாஜகவின் மாவட்ட தலைவராக இருந்த பாலசுந்தரம் ஆதரவாளருடன் வந்திருந்தார் . அப்பொழுது பாஜகவின் முன்னாள் மாவட்ட தலைவராக இருந்த பாலசுந்தரன் ஆதரவாளர்கள் அவர் நியமித்த பல்வேறு நிர்வாகிகளை மாற்றியதாக கூறப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பாஜகவினர் இடையே மோதல் - கடும் கோபத்தில் அண்ணாமலை | Clash Between Bjp Members

இதனை அடுத்து இருதரப்பு ஆதரவாளர்களிடையே இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி இருதரப்பினரும் மாறி மாறி நாற்காலிகள் வீசி மோதலில் ஈடுபட்டனர்.  இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

கடும் கோபத்தில் அண்ணாமலை 

சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் இதனால் அங்கு போர்க்களம் போல் காட்சியளித்தது ஒரே கட்சியில் இரு கோஷ்டி மோதல் நிலையை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இச்சம்பவம் பற்றி அறிந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரு தரப்பினரையும் கண்டித்துள்ளதாகவும் இதனால் அவர் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.