உருட்டு கட்டையால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட பாஜக - இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர்கள்
தாராபுரம் பேருந்துநிலையம் அருகே உருட்டுக்கட்டையால் பாஜக - இந்து மக்கள் கட்சி தலைவர்கள் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக - இந்து மக்கள் கட்சி மோதல்
பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததை இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் சமூக வலைதளங்களில் தவறாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தாராபுரம் பேருந்து நிலையம் அருகே திரண்ட இரு தரப்பினரும் அடிதடி மோதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் பாஜக - இந்து மக்கள் கட்சி தலைவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் அப்பகுதி பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பாரதிய ஜனதா கட்சி BJP யின் அசுர வளர்ச்சி ?
— பொள்ளாச்சி அருண்குமார் (@PollachiArunoff) May 1, 2023
மாவட்ட தலைவர் திரு மங்களம் ரவி அவர்கள் குழுவினரும் திரு கொங்கு ரமேஷ் அவர்களுடைய ஆதரவாளர்களும் தாராபுரம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள கொங்கு உணவுக்கு முன்பு ஆயுதங்களுடன் தாக்கி கொண்ட காட்சி pic.twitter.com/B4zHfrpgte