கர்நாடகாவில் வெடித்த கலவரம் - 144 தடை உத்தரவு!

Indian National Congress BJP Karnataka
By Vinothini May 11, 2023 05:44 AM GMT
Report

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது அதில் உண்டான கலவரத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்

கர்நாடகா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

clash-between-bjp-congress-144-issued-in-karnataka

இந்த வாக்குப்பதிவு முடிந்த பிறகு மங்களூர் புறநகரில் உள்ள மூட்ஷெட் என்ற பகுதியில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

வாக்குச்சாவடியில் ஏற்பட்ட சிறு வாக்குவாதம் காரணமாக, வாக்குப் பதிவிற்கு பிறகு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தடை உத்தரவு

இந்நிலையில், சம்பவ இடத்திலிருந்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

clash-between-bjp-congress-144-issued-in-karnataka

மேலும், இந்த மோதலின்போது, மூடுபிதிரி காங்கிரஸ் வேட்பாளர் மிதுன் ராயின் கார் அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழல் நிலவியதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.