எடப்பாடி பழனிசாமி வரவேற்பில் அதிமுகவினர் இடையே மோதல்: காரணம் என்ன?

admk edappadipalanisamy
By Irumporai Sep 24, 2021 06:28 AM GMT
Report

உள்ளாட்சி தேர்தலின் பரப்புரைக்காக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், விருதுநகர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் குழுவாகவும், தற்போது மாவட்ட செயலாளராக உள்ள ரவிசந்திரன் ஒரு குறிப்பாகவும் உள்ளனர். இந்நிலையில், இந்த இரு குழுவிக்கும் இடையே, எடப்பாடி பழனிசாமி முன்பாகவே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது எடப்பாடி பழனிசாமி அவர்கள் வாகனம் செல்லும் பொழுது கே.டி. ராஜேந்திர பாலாஜி ஒழிக என அதிமுக தொண்டர் ஒருவர் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளர்கள், கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிசந்திரனின் ஆதரவாளர்களை தாக்கினார்கள்.

எடப்பாடி பழனிசாமி வரவேற்பில் அதிமுகவினர் இடையே மோதல்: காரணம் என்ன? | Clash Between Aiadmk Leaders Edappadi Palanisamy

இதனால் இரு பிரிவினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.  இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே சாத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜந்திரபாலாஜியின் ஆதரவாளர்கள்,சாத்தூர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் ஆதரவாளர்கள் என இருந்த நிலையில், ராஜவர்மன்ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளராக மாறிவிட்ட நிலையில்,மாவட்டம் இரண்டாக பிரிக்கபட்டது.

தற்போது கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் ஆதரவாளர்கள், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜந்திரபாலாஜியின் ஆதரவாளர்கள் என அதிமுகவிலே இருபிரிவினர்களாக இருப்பது இந்த மோதலுக்கு காரணம் என குறிப்பிடத்தக்கது.