நாங்க பெண் கொடுகுறதால நீங்க பேசுறதுலாம் கேட்கனுமா? - அடித்து நொறுக்கப்பட்ட மண்டபம்...மயங்கிய மணப்பெண்
நாகர்கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பெண் வீட்டாருக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் மண்டபம் அடித்து நொறுக்கப்பட்டது இதனால் மணப்பெண் மயங்கி விழுந்தார்.
திருமண விருந்தில் மோதல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மறவன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மணமகனுக்கும் ராஜகாமங்களம்துறை பகுதியைச் சேர்ந்த மணமகளுக்கும் திருமணம் நடைபெற்று அதற்கான விருந்து இரவில் நடந்தது.
அப்போது மணமகள் வீட்டாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் மதுபோதையில் சூதாட்டம் ஆடியாதோடு அங்கு நின்றிருந்த மணமகனின் உறவுக்கார பெண்கள் மீது மோதியுள்ளனர்.
மயக்கமடைந்த பெண்
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் திருமண மண்டபத்தின் ஜன்னல், கண்ணாடி , இருக்கைகளை அடித்து உதைத்தனர். இதில் 6 பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவங்களை கண்டு அதிர்ச்சி அடைந்த மணப்பெண் மண்டபத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.