இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் - CJP தலைவர் அபிஜித் தீப்கே புகழாரம்

M K Stalin Pinarayi Vijayan Arvind Kejriwal Cockroach Janta Party (CJP)
By Karthikraja Aug 26, 2026 05:26 AM GMT
Report

cjp founder Abhijeet Dipke picks mkstalin as best cm: மு.க.ஸ்டாலின் இந்தியாவின் சிறந்த முதல்வர்களில் ஒருவர் என CJP தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

2 மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் தொடங்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி(CJP), டெல்லியில் நீட் முறைகேடுகளுக்கு எதிராக பெரிய போராட்டத்தை முன்னெடுத்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைத்து மோடி அரசை பணிய வைத்தது. 

இந்தியாவின் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் - CJP தலைவர் அபிஜித் தீப்கே புகழாரம் | Cjp Founder Abhijeet Picks Mk Stalin As Best Cm

அதன் நிறுவனராக உள்ள அபிஜித் தீப்கே ஜென் ஸீ கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதில், இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டார்.

மேலும், மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை பொருளாதாரத்தில் சிறந்த மாநிலமாகவும், பினராயி விஜயன் கேரளத்தை சுகாதாரத்தில் சிறந்த மாநிலமாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் தில்லியை கல்வியின் சிறந்த மாநிலமாகவும் மாற்றியதாக குறிப்பிட்டார்.