ரஷ்யாவில் உள்நாட்டு போர் பதற்றம் - வான் வழித்தாக்குதலால் மக்கள் அலறி அடித்து ஓட்டம்..!

Russo-Ukrainian War Ukraine Russia
By Thahir Jun 24, 2023 12:34 PM GMT
Report

ரஷ்யாவில் உள்நாட்டு போர் பதற்றம் தொடங்கியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தங்கள் பாதையில் குறுக்கிட வேண்டாம் என ரஷ்யா ராணுவத்திற்கு வாக்னர் படை அறிவுறுத்தியுள்ளது.

யார் இந்த வார்னர் குழு?

வாக்னர் ஆயுதக் குழு என்பது ரஷ்யாவில் இயங்கி வரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பாகும். இது ஒரு கூலிப்படை என்று சொல்லலாம்.

ரஷ்யா மட்டுமல்லாது லிபியா, மாலி, சிரியா எனப் பல பகுதிகளிலும் உள்நாட்டுப் போரில் ஒப்பந்ததாரர்களாக இந்த குழுவினர் இயங்கி வருகின்றனர்.

Civil war tensions in Russia

உலகம் முழுவதும் இந்த குழு சட்டத்துக்கு அப்பாற்பட்டே செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவிலும் தனியார் ராணுவ ஒப்பந்தக்காரர்கள் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளனர்.

இருந்த போதிலும் அதிபர் புதினின் மறைமுக ஆதரவோடும் , ராணுவத்தின் சம்மதத்தோடு தேவைப்படும் போது இந்த குழு இயக்கி கொள்ளப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வளர்த்த கிடா மார்ப்பில் பாயும் என்ற பழமொழி ஒன்று உள்ளது. அதற்கேற்றார் போல் வாக்கனர் ஆயுதக் குழு ஓர் எச்சரிக்கை விடுக்க புதினால் வளர்க்கப்பட்ட குழுவால் தற்போது அவருக்கே நெருக்கடி எழுந்துள்ளது.  

வாக்னர் குழு தலைவர் எச்சரிக்கை 

வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஸின் சனிக்கிழமை வெளியிட்ட ஆடியோவில் ரஷ்யா ராணுவத் தலைமைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் உள்நாட்டு போர் பதற்றம் - வான் வழித்தாக்குதலால் மக்கள் அலறி அடித்து ஓட்டம்..! | Civil War Tensions In Russia

அதில், நாங்கள் 25 ஆயிரம் பேர் இருக்கிறோம். நாட்டின் ராணுவத் தலைமையை வீழ்த்துவோம். நாங்கள் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம்.

வழியில் எந்த தடை வந்தாலும் எங்கள் பாணியில் துவம்சம் செய்வோம். ஏற்கனவே ரஷ்ய ராணுவத்தை தாக்கியுள்ளோம்.

எங்கள் படைகள் ரஷ்யாவின் தெற்கே உள்ள ரோஸ்டோவ் பகுதிக்குள் நுழைந்துவிட்டது என்று கூறியுள்ளார். இதனை உள்நாட்டு ஊடங்கள் மற்றும் ரஷ்யா தரப்பு உறுதி செய்யவில்லை என தகவல் வெளியாகிறது.

சமீப காலமாக ரஷ்ய ராணுவம் மிகுந்த கெடுபிடியால் ஒடுக்கி வைத்துள்ளது. இந்நிலையில் தனது படையினை ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார் ப்ரிகோஸின்.

முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்தில் ரஷ்ய மக்கள் கைகோர்த்து ராணுவத் தலைமையை வீழ்த்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

ராணுவ ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்திய வாக்னர் படை 

கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியதிலிருந்தே ஒரு புறம் வாக்னர் குழுவையும் சமாளித்து வந்த ரஷ்ய அதிபருக்கு புதிய எச்சரிக்கை நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

Civil war tensions in Russia

இந்த நிலையில் வாக்னர் குழு ராணுவத்தின் 3 ஹெலிகாப்டர் மற்றும் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வாக்னர் படை மாஸ்கே நகரை நோக்கி முன்னேறி செல்வதாக தகவல்கள் தெரிவிகின்றன.