போயிங் விமானத்தை இயக்க 90 விமானிகளுக்கு தடை

90 pilots Boeing 737 MAX DGCA
By Irumporai Apr 13, 2022 04:27 AM GMT
Report

முறையாக பயிற்சி பெறாததால் போயிங் 737 MAX ரக விமானத்தை இயக்க ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் 90 விமானிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக,டிஜிசிஏ திருப்தி அடையும் வகையில் அவர்கள் மீண்டும் பயிற்சி பெற வேண்டும் என்று (டிஜிசிஏ) இயக்குநர் ஜெனரல் அருண் குமார் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,போதிய அளவில் விமானிகள் இருப்பதால் இந்த கட்டுப்பாடு MAX விமானங்களின் செயல்பாடுகளை எந்த விதத்திலும் பாதிக்காது என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக,ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 11 மேக்ஸ் விமானங்களை இயக்குகிறது என்றும் இந்த 11 விமானங்களை இயக்க சுமார் 144 விமானிகள் தேவைப்படுகின்றனர்.

ஆனால்,MAX இல் பயிற்சி பெற்ற 650 விமானிகளில் 560 பேர் தொடர்ந்து இருப்பார்கள் என்றும் ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.