ரூ24,500 பதிலாக ரூ2000 லட்சம் கோடியை தவறுதலாக அனுப்பிய வங்கி - அடுத்து நடந்த டிவிஸ்ட்

Citi Group Money
By Karthikraja Mar 02, 2025 05:00 PM GMT
Karthikraja

Karthikraja

in வணிகம்
Report

 வாடிக்கையாளரின் வங்கி கணக்கிற்கு தவறுதலாக ரூ.2000 லட்சம் கோடி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

7,000 லட்சம் கோடி

வங்கியில் பெரும்பாலும் பணப்பரிவர்தனைகள் சரியாக நடைபெற்றாலும், தொழில்நுட்ப கோளாறு அல்லது கவனக்குறைவால் சில தவறுகள் நடைபெறுவதுண்டு. 

81 trillion dollar

அதே போல் வாடிக்கையாளர் ஒருவரின் வங்கி கணக்கிற்கு 280 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.24,500) அனுப்பவதற்கு பதிலாக $81 டிரில்லியன் (ரூ.7,000 லட்சம் கோடி) பணம் அனுப்பப்பட்டுள்ளது.

90 நிமிடத்தில் கண்டுபிடிப்பு

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டும் செயல்படும் சிட்டி வங்கியில் இந்த தவறு நிகழ்ந்துள்ளது. ஒரு ஊழியர் தவறுதலாக அதிக பூஜ்ஜியங்களை உள்ளிட்டதே இந்த தவறுக்கு காரணமாகியுள்ளது. அதனை 2வது ஊழியரும் சரிபார்க்காமல் ஒப்புதல் அளித்துள்ளார். 

city group bank

ஆனால் 3வது ஊழியர் பரிவர்த்தனை நடைபெற்ற 90 நிமிடத்தில் அதை கண்டுபித்துள்ளார். வாடிக்கையாளர் பணத்தை எடுக்கும் முன்பே இந்த பிழை கண்டுபிடிக்கப்பட்டுச் சரி செய்யப்பட்டதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிட்டி வங்கியில் இது போன்ற பிழை நடப்பது முதல்முறை அல்ல. கடந்த ஓராண்டில் மட்டும் சிட்டி குரூப் வங்கியில் இது போல 10 முறை தவறுதலாக வாடிக்கையாளர்களுக்கு பணம் அனுப்பப்பட்டு திரும்ப பெறப்பட்டிருக்கிறது. இதற்காக கடந்த வருடம் மட்டும் சுமார் 136 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.1189 கோடி) சிட்டி வங்கிக்கு அபராதமாக விதிக்கப்பட்டது.