சர்க்கஸ் சாகசத்தின் போது அதிர்ச்சி சம்பவம் - 20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த நபர் - பதபதக்கும் வீடியோ வைரல்
கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி ஜெர்மனியின் டுயிஸ்பார்க் பகுதியில் உள்ள FlicFlac சர்க்கஸ் குழுவின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன.
அப்போது ஒரு பலகையிலிருந்து இன்னொரு பலகைக்கு திறமையான சர்க்கஸ் கலைஞரும், தொழில்முறை ஸ்கேட்டருமான லூகாஸ் மாலேவ்ஸ்கி தாவ முயற்சி செய்தார். அப்போது அவருடைய ரோலர் பிளேடில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, எதிர்முனையிலிருந்த உயரமான மேடையை பிடிக்க முடியாமல், நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் 20 அடி உயரத்திலிருந்து லூகாஸ் மாலேவ்ஸ்கி தவறி விழும் காட்சியைக் கண்ட சக ஊழியர்கள், அவரை விரைவாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவத்தால் நிகழ்ச்சியில் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த லூகாஸ் இது குறித்து கூறுகையில், எனக்கு விலா எலும்புகள், இடுப்பு, தோள்பட்டையில் அடிபட்டுள்ளது. ஒரு கார் என் மீது மோதியது போல் உணர்ந்தேன். ஆனால் நான் நன்றாக இருக்கிறேன், நான் உயிருடன் இருக்கிறேன் என்றார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.