20 வருடமாக உயிருக்கு போராடி வரும் பாரதிராஜா படத்தின் நாயகன்
கடந்த 20 வருடங்களாக உயிருக்கு போராடி வரும் தனது படத்தின் கதாநாயகனை நேரில் சென்று நலம் விசாரித்தார் இயக்குனர் பாரதிராஜா.
இயக்குநர் பாரதிராஜாவின் "என் உயிர்த் தோழன்" படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, கடந்த 20 வருடமாக உயிருக்குப் போராடி வரும் நடிகர் பாபு-வின் நிலைமையை பற்றி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த பாபு, அடிமட்ட அரசியல் தொண்டனாக வந்து அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்தார். அந்த நடிப்பால் அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன.
கிட்டத்தட்ட 14 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார் பாபு. ஆனால் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்த பாபுவுக்கு "மனசார வாழ்த்துங்களேன்" படத்தில் நடித்தபோதுதான் சோதனை ஏற்பட்டது. அந்த படத்தின் சண்டை காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது முதுகில் பலத்தக் காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் தப்பினார். ஆனால் அதன் பிறகு அவரால் சகஜமாக எழுந்து நடமாட முடியவில்லை.
இதனால் கடந்த 20 வருடமாக படுத்த படுக்கையாக உள்ளார். சமீபத்தில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க போன பாரதிராஜா கண்கலங்கி கொஞ்சம் உதவி செய்து விட்டு வந்துள்ளார்.
பாபுவை பாரதிராஜா சந்தித்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வரைலாகி வருகிறது.