திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: கடம்பூர் ராஜு எச்சரிக்கை

theater tamilnadu kadapumrraja
By Jon Jan 12, 2021 01:37 PM GMT
Report

திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சரான கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை மாஸ்டர் உட்பட சில திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன, இப்படத்திற்கான டிக்கெட் ரூ.500 முதல் ரூ.2000 வரை விற்பனையாகவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜு, திரையரங்குகளுக்கு கேளிக்கை வரியில் சலுகை அளிப்பது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார். திரையரங்கில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.