சோழனின் பயணம் தொடர்கிறது ஆயிரத்தில் ஒருவன்-2 அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன்

cinima-dhanus-selava
By Jon Jan 02, 2021 08:50 AM GMT
Report

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமாசன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் வெளியான சமயத்தில் பெரிய வெற்றியினை பெறவில்லை, ஆனாலும் தற்போது ,சிறந்த ஓன்றாக ரசிகர்களால் கொண்டாடபட்டு வருகிறது.

தற்போது திரையரங்குகளில் ஆயிரத்தில ஒருவன் மீண்டும் திரையிடப்பட்டு வருகிறது, இதனால் ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போது வரும் என்று இயக்குனர் செல்வராகவனிடம் ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் செல்வர்காவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பினை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அவரது ட்விட்டர் பதிவில் இது வரை கேட்டிருந்த ,காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால் என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் செல்வராகவன். இப்படம் வரும் 2024ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் அந்த போஸ்டரில் உள்ளது.

இதனால் சோழனின் பயணம் தொடர்கிறது என்று சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.