ஆப்கானிஸ்தான் நிலைமையை கண்டால்.... பயத்தில் என்னால் சாப்பிட கூட முடியவில்லை - கதறி அழுத பிரபல நடிகை!
அதை நினைத்துப் பார்த்தாலே பயத்தில் சாப்பிட முடியவில்லை. கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது என்று நடிகை அர்ஷி கான் அழுதுள்ளார்.
அர்ஷிகான் பிரபல மாடல் அழகி. இவர் இந்தியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இவர் ஆப்கானிஸ்தானில் பிறந்தவர்.
இவரது குடும்பத்தினர் இந்தியாவிற்கு வந்துவிட்டனர். ஆனால், இவரின் குடும்பம் உறவினர்கள் பலரும் இன்னமும் ஆப்கானிஸ்தானில் தான் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தானும் ஆப்கானிஸ்தானில் பிறந்தவள் என்பதை நினைக்கும் போது அங்கு தற்போது நடக்கும் சம்பவங்களை நினைத்துப் பார்க்கும் போது தனக்கு சாப்பிட பிடிக்கவில்லை என்றும் கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார் நடிகை அர்ஷிதா கான்.
இது குறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். காபூல் விமான நிலையத்தில் நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியை அளிக்கிறது. ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை நினைத்துப் பார்த்தால் தனக்கு சாப்பிடக்கூட பிடிக்கவில்லை.
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவி செய்யுமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன். தனது உறவினர்களும் நண்பர்களும் ஆப்கானிஸ்தானில் தான் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு அதிசயம் நடந்தால் மட்டுமே அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று கதறி அழுதபடியே கூறினார்.
