‘இனி அந்த சேனல் பக்கம் போகமாட்டேன்...’ - பட்டென்று போட்டுடைத்த விஜே பாவனா
டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தமிழ் ரசிர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பாவனா பாலகிருஷ்ணன்.
சில காலம் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்து வந்தார். தமிழ் தொலைக்காட்சிகளைப் பொருத்தவரை, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
தற்போது, மீண்டும் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், “3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரை எண்டெர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன். இப்போது கலர்ஸ் சேனல் நிகழ்ச்சியில் டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன்.” என பதிவிட்டிருந்தார்.
இது குறித்து, பாவனா பேட்டி ஒன்றில், அவரது வேலை அனுபவங்கள், சொந்த விஷயங்கள் என பலவற்றை பகிர்ந்து கொண்டார். அப்போது மீண்டும் விஜய் டிவி பக்கம் போவீர்களா என கேட்டதற்கு, “இனி விஜய் டிவி பக்கம் போக வேண்டாமென இருக்கிறேன். அவங்க ஸ்டைல் வேற. என் ஸ்டைல் வேற. முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி நிகழ்ச்சி எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.