‘ஒ சொல்றியா மாமா... ஓ.. ஓ.. சொல்றியா மாமா...’ - வைரலாகும் சிவாஜியின் தில்லானா மோகனாம்பாள்
பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்துள்ள படம் 'புஷ்பா'.
இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இடம்பெறும் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். அவர் ஐட்டம் பாடலுக்கு நடனமாடுவது இதுவே முதன்முறையாகும்.
இப்பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. தமிழில் இப்பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடி உள்ளார். ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்பாடல், சர்ச்சையிலும் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்ஸ்டாவில் ‘ஒ சொல்றியா மாமா.. ஓ..ஓ..சொல்றியா மாமா..’ பாடலுக்கு தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜியும், பத்மினியும் பாடுவது போல் பின்னணியில் இப்பாடலை வைத்து வீடியோவை வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -