சமந்தாவின் ‘ஓ..சொல்றியா மாமா..‘ - ரிகல்சலே இப்படி இருக்கே.. - வாயை பிளந்த ரசிகர்கள் - வீடியோ வைரல்
அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியானது புஷ்பா திரைப்படம். இப்படம் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது.
இப்படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ, இல்லையோ, அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நடிகை சமந்தாவின் நடனமாடிய ஓ சொல்றியா மாமா… ஓஓ சொல்றியா மாமா… பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
எந்த அளவிற்கு இப்பாடலுக்கு வரவேற்பு இருந்ததோ, அதே அளவிற்கு இப்பாடலுக்கு எதிர்ப்பும் கிளம்பியது. பாடலையை தடை செய்யாவிட்டால், பாடலை பாடிய நடிகை ஆண்ட்ரியா, நடனம் ஆடிய சமந்தா, பாடலாசிரியர், இசையமைப்பாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்படும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எச்சரித்தது.
தற்போது நடிகை சமந்தா ஓ சொல்றியா மாமா… ஓஓ சொல்றியா மாமா… பாடலுக்கு ரிகல்சல் செய்யும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ரிகல்சலே இப்படி இருக்கே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.