'மாநாடு' படத்தின் அமோக வெற்றி - மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள படக்குழுவினர் - வீடியோ வைரல்

cinema-viral-video-manatu-hits
By Nandhini Nov 29, 2021 07:37 AM GMT
Report

'மாநாடு’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதனால், மகிழ்ச்சி அடைந்த படக்குழுவினர் அனைவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

சிம்பு மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் வெளியான படம் மாநாடு. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. படத்தில் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டை பெற்று வருகின்றனர்.

இப்படத்தில், சிம்பு, எஸ்.ஜே. சூர்யா இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். வெளியான 2 நாட்களிலே படம் 14 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், மாநாடு படக்குழுவினர் அனைவரும் படத்தை வெற்றி பெறச் செய்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.