உடற்பயிற்சி கூடத்தில் மாஸ் காட்டிய நடிகர் சோனு சூட் - வைரல் வீடியோ
ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார்.
விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி, பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கிராமத்தில் மாணவர்களுக்கு ஒழுங்காக சிக்னல் கிடைக்க மொபைல் டவர் அமைத்தது என எண்ணற்ற உதவிகளை சோனு சூட் செய்து வருகிறார்.
சோனு சூட்டின் நல உதவிகளை திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். மேலும் அவரை பஞ்சாபின் அடையாளம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து கவுரவித்தது.
இந்நிலையில், நடிகர் சோனு சூட்டி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் உடற்பயிற்சி கூடத்தில் அவர் செய்யும் செயல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதோ அந்த வீடியோ -