அனிருத் வெளியிட்ட வீடியோ - மகிழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்

cinema-viral-video
By Nandhini Sep 13, 2021 11:17 AM GMT
Report

சர்வதேச கிரிக்கெட்டில் நூறு சதங்கள் என்ற மலைக்க வைக்கும் சாதனை படைத்த ஒரே கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர்தான்.  அறிமுக முதல் தர போட்டியில் சதமடித்த வீரர். சாதனைகளின் நாயகன் என ரசிகர்களால் சச்சின் டெண்டுல்கர் கொண்டாடப்படுகிறார். 

இடது கையால் எழுதும் பழக்கமுள்ள சச்சின் வலது கை பேட்ஸ்மேனாகவும், வலது கை பந்துவீச்சாளராகவும், ஃபீல்டிங்கின் போதும் வலது கையால் பந்தை எறிபவராகவும் விளங்கினார்.

சுமார் 24 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த சச்சின் மொத்தமாக 34,357 ரன்கள் குவித்துள்ளார். சராசரியாக 48.52 ரன்கள் என்ற வீதத்தில் பேட்டிங் செய்துள்ள சச்சின் நூறு சதம் மற்றும் 164 அரைசதம் ஆகியவற்றை குவித்துள்ளார்.

இந்நிலையில், சச்சினின் தீவிர ரசிகரான இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சச்சின் மாஸா நடந்து வருகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ