அண்ணாத்த போஸ்டருக்கு ரத்த அபிஷேகம் - சர்ச்சையில் சிக்கிய ரஜினி ரசிகர்கள் - அதிர்ச்சி வீடியோ!
சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு நேற்று நல்ல நாளாக இருந்தது. நேற்று காலை அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு வெளியான படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களின் உற்சாகத்தை அளித்தது.
இதனால், நடிகர் ரஜினி ரசிகர்கள் வேற லெவலக்கு கொண்டாடினர். மேலும், படத்தின் செகண்ட் லுக்கும் வெளியாகி ரசிகர்களுக்கு இடையில் பெரும் ஆரவாரத்தை கொடுத்தது. அதே நேரத்தில் சில ரசிகர்களால் பெரும் கொடூரமான சோகமும் நடந்துள்ளது.
நீண்ட மாதங்களுக்குப் பிறகு, தலைவர் நடிகர் ரஜினி படத்தின் போஸ்டர்கள் (Annaatthe First Look) வெளியானதால், அதுவும் ஒரே நாளில் மூன்று முறை அண்ணாத்த படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டதால், ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியின் எல்லை மீறி சென்றது.
தமிழ்நாட்டை பொறுத்த வரை உச்ச நடிகர்களின் படங்கள் குறித்து அறிவிப்பு, படத்தின் தலைப்பு, போஸ்டர்கள், டீசர், ட்ரைலர் மற்றும் படம் திரைக்கு வரும் நாள் என எந்த அறிவிப்பும் வெளியானாலும், அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் பெரிய பெரிய கட்-அவுட் வைத்து, அதற்கு மாலை போட்டு, கற்பூரம் காட்டி, பால் அபிஷேகம் செய்ரு அதர்களம் செய்வார்கள்.
அதையெல்லாம் தாண்டி, தற்போது ரஜினி ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று, யாருமே எதிர்பார்க்காத வகையில், அண்ணாத்த போஸ்டருக்கு ரத்தத்தால் அபிசேகம் செய்திருக்கிறார்கள்.
அண்ணாத்த படத்தின் போஸ்டருக்கு ஆட்டை பலி கொடுத்து, அதன் ரத்தத்தை போஸ்டர் மேல் ஊற்றி அபிஷேகம் செய்திருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தை கண்டித்து போலீஸ் வழக்கப் பதிவு செய்யுமா? நடிகர் ரஜினிகாந்த் இது குறித்து பேசுவாரா அல்லது அறிக்கையாவது விடுவாரா? என பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.